ETV Bharat / state

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்: ப.சிதம்பரத்தின் ஆதரவு காரணமா?

author img

By

Published : May 25, 2021, 5:24 PM IST

பாஜக பாணியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

selva-perunthagai-mla-elected-as-congress-assembly-leader-is-the-pc-support-on-back
காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்: ப.சிதம்பரத்தின் ஆதரவு காரணமா?

சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.

மூன்றாவது பெரிய கட்சி

65 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமர்ந்துள்ள நிலையில், அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவையில் இடம் ஒதுக்கப்படவுள்ளது.

அனைத்துக் கட்சிகளும் தங்களது சட்டபேரவைத் தலைவரை அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் அறிவிக்காமல் இருந்தது. சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க அக்கட்சி இரண்டு முறை எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியும், இழுப்பறி நீடித்தது. இது அக்கட்சி எம்எல்ஏக்களிடம் குடுமிப்பிடி சண்டை நடந்ததை பட்டவர்த்தனமாகக் காட்டியது.

selva-perunthagai-mla-elected-as-congress-assembly-leader-is-the-pc-support-on-back
ராகுல்காந்தியுடன் செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் பதவியைப் பிடிப்பதில், குளச்சல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணிக்கும் கடும் மோதல் நிலவியது. இந்தச் சூழலைப் புரிந்து கொண்டு மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் ஆகிய உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சமரசம் பேசிய நிலையில், யாரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை எனக்கூறப்படுகிறது.

ப.சிதம்பரத்தின் ஆதரவு?

தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சி, திராவிட கட்சிகள் மீதே சவாரி செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வருகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிலையை விளக்கி, பாஜக பாணியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுத்து, அக்கட்சியின் தலைமை நேற்று முன்தினம் (மே.23) அறிவித்தது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ராஜேஷ்குமாரை துணைத் தலைவராக கட்சி அறிவித்துள்ளது.

ப.சிதம்பரத்துடன் செல்வப்பெருந்தகை

இந்நிலையில், இந்தத் தேர்வுக்கு முன்னதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கட்சித் தலைமைக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றே கூறலாம். 1980ஆம் ஆண்டுவரை நான்கு முறை அத்தொகுதியில் வெற்றி பெற்ற யசோதாவுக்கு தலைவர் பதவி மறுக்கப்பட்டு துணைத் தலைவர் பதவி கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டது. அதற்கு பரிகாரமாக தற்போது செல்வப்பெருந்தகைக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

செல்வப்பெருந்தகை(இடது), ராஜேஸ்குமார்(வலது)

செல்வப்பெருந்தகையின் பின்னணி

2006-2011 சட்டப்பேரவையில் விசிக சார்பில் எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சில நாள்கள் பயணித்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு விவாதங்களில் செய்தித் தொடர்பாளராகப் பங்கேற்றுள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரசின் தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சித் தலைவராக செல்வபெருந்தகை தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.