ETV Bharat / state

சென்னையில் 2.5 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - பெசன்ட் நகர் கடற்கரை

சென்னையில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2.5 மெட்ரிக் டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
author img

By

Published : Oct 30, 2022, 6:00 PM IST

சென்னை: சென்னையில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2.5 மெட்ரிக் டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் அமைந்து இருக்கும் கடைகளிலும் மாநகராட்சியின் சார்பில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் கடந்த 7 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்கள், குப்பைத்தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளைக்கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.10.600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஒரு வாரத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 6,155 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 2,226 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிலிருந்து 1,425 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7,22,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து நேற்று(அக்.29) சென்னை அடையாறு, பசுமைவழிச்சாலையில் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்த வணிக வரித்துறை அலுவலர்கள், ஒரு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இத்தகவலின் அடிப்படையில் மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக தொடர்புடைய இடத்திற்குச்சென்று அவ்வாகனத்திலிருந்த 2.5 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்து ரூ.25,000 அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் 4,822 சாலைகள் சீரமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.