ETV Bharat / state

சீமான் மீது தேசதுரோக வழக்குப்பதிய வேண்டும் - காங். எம்.பி. ஜெயக்குமார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜிவ்காந்தி கொலையைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது தேசதுரோக வழக்குப்பதிய வேண்டுமென காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

seeman
author img

By

Published : Oct 14, 2019, 4:00 PM IST

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரப்புரையின்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜிவ்காந்தி கொலையைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இதைத் தொடர்ந்து சீமானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார், இன்று தலைமைத் தேர்தல் அலுவலரிடம் சீமான் மீது புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பரப்புரையில் அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் பேசியிருக்கிறார்.

குறிப்பாக, ராஜிவ்காந்தி கொலையைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது கண்டனத்திற்குரியதாகும், இதனால் அவர் மீது சென்னை காவல் துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளேன். அதனைத்தொடர்ந்து, தற்போது தலைமைத் தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளேன். அதில், இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசிய சீமான் - காங்கிரஸார் புகார்

Intro:

Body:ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என சீமான் கூறியுள்ளதால் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி மரணத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார். இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் சீமான் மீது புகார் கொடுக்க காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பி ஜெயக்குமார் வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 2 தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு அமைதியை குலைக்கும் விதத்தில் பரப்புரை செய்திருக்கிறார். நாங்கள்தான் ராஜீவ்காந்தியை கொன்றோம் என்று பேசியிருக்கிறார். இதனால் எங்கள் தொண்டர்கள் வெகுண்டு உள்ளனர். இதுகுறித்து காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். அதனை தொடர்ந்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி சந்தித்து மனு கொடுத்துள்ளேன். சீமான் பேசி இருப்பது ஒரு தேசத் துரோக செயல். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். இரண்டு தொகுதிகளிலும் அந்தக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இந் நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து சீமான் கூறியிருக்கும் கருத்து நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது, என்று கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.