ETV Bharat / state

‘நம்பிக்கையோடு இருங்கள்; கரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவருவோம்’ - சீமான் - சீமான் வெளியிட்ட வீடியோ

சென்னை: நம்பிக்கையோடு இருங்கள், கரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் வெளியிட்ட காணொளி
சீமான் வெளியிட்ட காணொளி
author img

By

Published : Apr 1, 2020, 3:14 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “உலகமெங்கும் கரோனோ என்கிற இந்த நோய்த்தொற்றால் பேரச்சம் பரவியிருக்கிறது. உலகமே ஒடுங்கி, உறைந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இதை எதிர்கொள்ள வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நம்முடைய கைகளை அடிக்கடி கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைக் கொடுப்பதைத் தவிர்த்தல் என நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.

கரோனா வைரஸ் எதிர்கொள்கிற நாம் ஒவ்வொருவரும் போராளிதான் என்றாலும் களத்தில் நின்று தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், தூய்மைக் காவலர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைத் தந்து கொண்டிருப்பவர்கள்தான் களத்தில் முன்னணியில் நின்றுப் போராடும் போராளிகள்.

காலரா, பெரியம்மை, போலியோ போன்ற எத்தனையோ கொடிய நோய்களில் இருந்தெல்லாம் நாம் மீண்டுள்ளோம். அதுபோல இதிலிருந்தும் நாம் மீண்டுவருவோம். நம்பிக்கையோடு, பாதுகாப்பாக இருங்கள்.

தமிழர் உறவுகள் முடிந்தவரை உணவின்றி, நீரின்றித் தவிக்கும் உறவுகளுக்கு உதவுங்கள். முகக்கவசம், கையுறை அணிந்து நீங்கள் பாதுகாப்பாக இருந்துகொண்டு மற்றவர்களுக்கு உதவியை செய்ய வேண்டும்.

சீமான் வெளியிட்ட காணொலி

ஏனெனில் அதைச் செய்யும்போது அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும், நாமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இதில் முதன்மையாகக் கவனிக்க வேண்டியது. நம்பிக்கையோடு இருங்கள், நாம் இதிலிருந்து மீண்டுவருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவிற்கு கபசுப மருந்து: சித்த மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.