புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று (ஆக.16) ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது மதுரவாயல் காவல் துறையினர் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதில் சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், நோய்த்தொற்று பரவும் வகையில் செயல்படுதல் உட்பட மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி!