ETV Bharat / state

திடீரென ஒலித்த எச்சரிக்கை மணி.. அச்சத்தில் பயணிகள் - சென்னை விமான நிலையத்தின் பரபரப்புக்கு காரணம் என்ன?

Chennai airport: சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு ஒத்திகை திடீரென நடந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு ஒத்திகையால் பரபரப்பான சென்னை விமான நிலையம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 8:35 PM IST

சென்னை: நேற்று (டிச.21) சென்னை விமான நிலையத்தின் பின்பகுதியில் உள்ள அடையாறு ஆற்றுப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் சிலர் உள்ளே புகுந்து விட்டதாக கூறப்பட்டதுடன், அபாய எச்சரிக்கை மணிகளும் ஒலிக்கப்பட்டன. இதையடுத்து விமான நிலைய அதிரடிப்படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், சென்னை மாநகர போலீஸ் அதிரடி படையினர், விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்புப் படை குழுவினர், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் உள்பட அனைவரும் பரபரப்பாக சென்னை விமான நிலைய ஓடு பாதைகளுக்கு பின்புறம், பழுதடைந்த பழைய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை தீயணைப்புப் படை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து, தீயை அவசரமாக அணைத்தனர். அதோடு கீழே விழுந்து கிடந்த சிலரை, மருத்துவக் குழுவினர் அவசரம் அவசரமாக தூக்கி வந்து, முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கிகளுடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த பரபரப்பு அடுத்த சில நிமிடங்களில் ஓய்ந்தது.

அதிரடி படையினர், தீயணைப்பு படையினர், மருத்துவக் குழுவினர், போலீசார் அனைவரும் அமைதியாக தங்களுடைய வாகனங்களுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அதன் பின்புதான் தெரிய வந்தது, சென்னை விமான நிலையத்தில் நடந்தது, பாதுகாப்பு ஒத்திகையென்று.

பயங்கரவாதிகள் யாராவது விமான நிலையத்திற்குள் சதி செய்யும் நோக்கத்துடன் புகுந்துவிட்டால், உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து, அவர்களை மடக்கிப் பிடிப்பதோடு விமானங்கள், பயணிகள், ஊழியர்கள் அனைவரையும் எப்படி பாதுகாப்பது என்று விமான நிலையத்தின் அனைத்து பிரிவினர் மற்றும் சென்னை மாநகர போலீசார் ஆகியோர் இணைந்து, இந்த திடீர் பாதுகாப்பு ஒத்திகையை தத்ரூபமாக நடத்தி உள்ளனர். இது திடீரென நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகை என்பது, விமான நிலையத்தில் உள்ள பலருக்குத் தெரியாததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு, அதன் பின்பு அமைதியானது.

இதையும் படிங்க: சென்னையில் நாளை தொடங்குகிறது பொங்கல் விற்பனை கண்காட்சி.. இங்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.