தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை (பிப்.14) சென்னை வருகிறார். இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையொட்டி காலை முதல் மதியம் வரை சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்நிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தின், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அலுவலர்கள் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பயணிகளுக்கான வசதிகள், பேருந்து உள்ளிட்ட பிற போக்குவரத்து வசதிகளுடன் சென்னை மெட்ரோ ரயிலை இணைப்பது உள்ளிட்டவை குறித்து அவர் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: நோட்டரி பப்ளிக் நியமனம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது செல்லும்' - உயர் நீதிமன்ற மதுரை கிளை