ETV Bharat / state

ஆவடியில் விதிமுறைகளை மீறி கட்டபட்ட கட்டடத்திற்கு சீல்!

சென்னை: ஆவடியில் விதிமுறைகளை மீறி கட்டபட்ட கட்டடத்திற்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

Sealed to the building built in violation of the rules in the corporation!
கட்டிடத்திற்கு சீல் வைத்த அலுவலர்கள்
author img

By

Published : Aug 31, 2020, 10:01 PM IST

சென்னை ஆவடிக்குட்பட்ட கோயில் பதாகையில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதில் இரண்டு அடுக்கில் வீடுகட்ட அவர் கட்டட அனுமதி பெற விண்ணப்பத்திருந்தார். இதனை தொடர்ந்து வெங்கடேசனுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கட்டட அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் ஆவடி மாநகராட்சி அலுவலர்கள் அங்கு ஆய்வு செய்தபோது வெங்கடேசன் அரசு அனுமதித்த எந்தவொரு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் கட்டடம் கட்டியிருப்பது தெரியவந்தது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் வெங்கடேசனுக்கு ஆவடி நகரமைப்பு அலுவலர்கள் 2 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

எனினும் அவரிடமிருந்து முறையான எந்த பதிலும் வராததால், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் முன்னிலையில் நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் உள்ளிட்ட அலுவலர்கள் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும் அதற்கான நோட்டிஸை வீட்டு சுவற்றில் ஓட்டினர்.தொடர்ந்து ஆவடி மாநகராட்சி பகுதியில் விதிமுறை மீறி கட்டப்படும் வீடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.