ETV Bharat / state

அரசு மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன் - வரும் கல்வியாண்டு முதல் நடைமுறை!

அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற புதிய நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

e
e
author img

By

Published : Jun 10, 2022, 9:08 PM IST

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகளை நடத்தி வருகிறது. மேலும் கூடுதல் வசதிகளுடன் 25 மாதிரி பள்ளிகளை 150 கோடி ரூபாய் செலவில் தொடங்கவும்; தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

ஏற்கெனவே சோதனை முறையில் சென்னையில் 10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பில் நன்கு பயிலக்கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகளுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சியும் பள்ளிக்கல்வித்துறையால் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரி பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவருக்கும் 9ஆம் வகுப்பில் தேசிய அளவில் தேர்வு நடத்தப்படுகின்றது.

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு எனப்படும் trust தேர்வு மதிப்பெண்ணும், 9ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு எனப்படும் nmms தேர்வில் பெற்ற மதிப்பெண்ணும், 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ntse தேர்வு மதிப்பெண்ணும் மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் நன்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதலே சிறப்புக்கவனம் செலுத்துவது மற்றும் சிறப்புப்பயிற்சி அளிப்பது போன்றவற்றின் மூலமாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதை வழிவகை செய்வதற்கு இந்த நடைமுறையை பின்பற்றி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்;ஓய்வு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.