ETV Bharat / state

சென்னை ஐஐடியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 60 புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி!

கரோனா தொற்றுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை ஐஐடியில் மாணவர்களின் புதுமையான தொழில் நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில் நுட்பங்களை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதுபோன்ற கண்டுபிடிப்புகளால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனவும் சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் 60 புதிய கண்டுபிடிப்புகளின் காட்சி

author img

By

Published : Mar 13, 2022, 8:10 PM IST

சென்னை: கரோனா தொற்றுக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை ஐஐடியில் மாணவர்களின் புதுமையான தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த தொழில்நுட்பங்களை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதுபோன்ற கண்டுபிடிப்புகளால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனவும் சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

மாணவர்களின் பல்வேறு கண்டுபிடிப்புகள்:

மேலும், தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டம்போன்று சென்னை ஐஐடியில் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், சென்னை ஐஐடியில் கற்பிக்கப்படும் பி.எஸ்சி ஆன்லைன் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முடியுமா? எனவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் நீர்த்தேக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் மாணவர்கள் கண்டுபிடித்த 60-க்கும் மேற்பட்ட புதுமையான தொழில்நுட்பங்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து, மீண்டும் நேரடி முறையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களின் கண்டுபிடிப்புகளை தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இந்தக் கண்காட்சியில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பேட்டரி வாகனம், மழை நீர் அதிகம் தேங்கும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் கருவிகள், வாக்குச்சாவடிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வாக்களிப்பதற்கான புதிய செல்போன் அப்ளிகேஷன், நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ரோபோ, விவசாயத்திற்கு மனித உழைப்பின்றி இயந்திரம் பயன்படுத்தி விதைத்தல், நடவு செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்கான இயந்திரம் உள்ளிட்ட கருவிகளின் வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சென்னையில் வெள்ளத்தைத் தடுக்க கருவி உருவாக்கம்:

ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு, சென்னை ஐஐடியின் இயக்குநர். திரு. காமகோடி அளித்துள்ள பிரத்யேகப்பேட்டி மற்றும் பேராசிரியர், மாணவர்கள் குழுக்களின் பேட்டி

இந்தக் கண்காட்சியை சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி நேரில் பார்வையிட்டார்.

பின்னர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அளித்த பேட்டியில், 'கரோனா வைரஸ் தொற்றால், இரண்டு ஆண்டுகள் கழித்து ஐஐடி மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புகளை உற்பத்திப்பொருட்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் அடையும்.

சென்னை ஐஐடி மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் தங்களின் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கல்லூரிகளில் ஆய்வுக்கூடங்கள் அமைக்க உள்ளோம். இதனால் பிற கல்லூரி மாணவர்களும் தங்களின் கண்டுபிடிப்புகளை ஐஐடியில் செய்ய முடியும்.

சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்பினைத் தடுக்கும் வகையில், ஐஐடி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர். அதனைத் தமிழ்நாடு அரசிற்கு வழங்க உள்ளோம். தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டம் சிறப்பான திட்டமாகும். பள்ளி மாணவர்களுக்கு 'உன்னால் முடியும் தம்பி' என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்வகையில் இந்த திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கியுள்ளார்.

சென்னை ஐஐடியில் உள்ள படிப்புகள் குறித்தும் வசதிகள் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் உடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஐஐடியில் வழங்கப்படும் பி.எஸ்சி பட்டத்தை ஆன்லைன் மூலம் வழங்க முடியுமா என்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.

நிலவில் பரிசோதனை செய்ய ரோபோ

அதேபோல், சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிப்புகள் குறித்தத் தரவுகளைப் பெற்று வைத்துள்ளதாகவும், அதனடிப்படையில் 'மொபைல் ஆப்' தயார் செய்யப்பட்டு நீர்த் தேக்கத்தின்போது பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான செயலி உருவாக்கப்படும் எனவும் மாணவர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி மாணவர்கள் நிலவில் இறங்கிப்பரிசோதனை செய்வதற்கான ரோபோவையும் கண்டுபிடித்துள்ளனர். இதனை நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பரிசோதனை செய்த பின்னர், பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம் என அதனை உருவாக்கிய மாணவர் தெரிவித்தார்.

அதேபோல் தற்போது அதிகரித்து வரும் விவசாயப் பணிக்கான ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், இயந்திரத்தினை பயன்படுத்தி நடவு செய்தல், விதை விதைத்தல், உரம் தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான கருவியையும் சென்சார் உதவியுடன் ஐஐடி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். தற்போது ஆரம்பகட்டத்தில் இதற்கானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

எங்கிருந்தும் வாக்களிக்க இயந்திரம்

இந்தியத் தேர்தல் ஆணையம் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் வாக்களிப்பது என்பது 100% நிறைவேறாத ஒன்றாகவே இதுவரை இருந்து வருகிறது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் சென்னை ஐஐடி மாணவர்கள் மொபைல் ஆப் மூலம் பாதுகாப்புடன் வாக்களிப்பதற்கான செயலியை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து இயந்திரவியல் துறை பேராசிரியர் பிரபு ராஜகோபால் கூறும்பொழுது, 'மாணவர்கள் உருவாக்கியுள்ள வாக்களிக்கும் செயலி மிகவும் பாதுகாப்பாக உள்ளது. தற்காலத்தில் வாக்களிக்கும் இயந்திரங்கள் 'ஹேக்' செய்யப்படுகின்றன என கூறுகின்றனர். அதுபோன்று இந்தச் செயலியில் செய்ய முடியாது. மேலும், ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் தனது வாக்கினை செலுத்தமுடியும். இதற்கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும்.

மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயலியைக் கொண்டு முதலில் சென்னையில் நடைபெறும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் அணுகி இந்த அப்ளிகேஷனை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

இதையும் படிங்க:உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடலை மீட்க வேண்டும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.