சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மாணவி பயின்ற தனியார் பள்ளி சூரையாடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகளை அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன் என தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசின் அனுமதி இல்லாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது சரியானதல்ல என்றும் அவர் கூறினார்.
மாணவியை இழந்த பெற்றோரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று நேரடியாக மூத்த அமைச்சர் எ.வா வேலு உடன் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.
இன்று மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது, தீர்ப்பின் அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் இன்று தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘மாணவி மரணத்தை அரசியலாக்குகிறார் ஈபிஎஸ்’ - அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்