ETV Bharat / state

நோயாளிகளைத் தனிமைப்படுத்த பள்ளிகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தல்! - directorate of school education

சென்னை: கரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதால், தனிமைப்படுவதற்கு ஏதுவாக பள்ளிகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

dsds
ds
author img

By

Published : Apr 1, 2020, 3:55 PM IST

கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் வகையில் காய்கறிக் கடைகளும், இறைச்சிக் கடைகளும் விசாலமான பள்ளி வளாகங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பட்டுவருகின்றன. கரோனா இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படும் மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவத் தொடங்கினால், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்குப் பள்ளிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனக் கல்வித் துறைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும், அரசு உதவிபெறும் பள்ளிகள் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'வெளியே சுற்றாதீர்கள்' - உங்களைக் கண்காணிக்கிறது ட்ரோன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.