ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு? மு.க. ஸ்டாலின் ஆலோசனை! - ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடியும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

MK Stalin meeting Today
MK Stalin meeting Today
author img

By

Published : Jul 30, 2021, 8:38 AM IST

ஹைதராபாத் : தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு தளர்வில்லா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தது.

அதன் பலனாக கரோனா பாதிப்புகள் மெல்ல குறையத் தொடங்கின. தொடர்ந்து ஊரடங்கு விதிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டன. அந்த வகையில் தற்போது அமலில் உள்ள தளர்த்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது.

எனினும் திரையரங்குகள், பள்ளிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 31) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர்கள், தலைமை செயலர், உயர்மட்ட அலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

இதையும் படிங்க : இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.