வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனிடையே, நேற்று (நவ.12) மழை காரணமாக கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ராணிபேட்டை, சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (நவ.13)சென்னை, திருவள்ளூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுள்ளது. இதனிடையே வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதாகவும் அதன் காரணமாக கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - தமிழ்நாடு அரசு ஆணை