ETV Bharat / state

'ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் அந்தப் பள்ளி திறக்கப்படாது' - school will not open

பள்ளிகள் திறக்கப்படும்போது ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்தப் பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடாத ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

vaccines
vaccines
author img

By

Published : Aug 25, 2021, 9:07 AM IST

Updated : Aug 29, 2021, 10:51 PM IST

சென்னை: அக்டோபர் மாதத்தில் கரோனா தொற்றின் மூன்றாம் அலை உச்சம் பெறும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 351 ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் பணிபுரிந்துவருகின்றனர். சுமார் நான்கு லட்சம் பணியாளர்கள் 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் தனியார் பள்ளியில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்ற விவரம் பள்ளிக் கல்வித் துறையால் பெறப்படவில்லை. செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் பொழுது தடுப்பூசி போடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி
பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி

இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்துவருகின்றனர்.

பள்ளிகளைத் தூய்மை செய்ய நிதி ஒதுக்கீடு

பள்ளியில் அனைத்து வகை ஆசிரியர்களும் கரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா என உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தாக்கப் பயிற்சி

கரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிக நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகைபுரிகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும்விதமாக அரசால் வழங்கப்பட்ட புத்தாக்கப் பயிற்சியை 45 நாள்களுக்கு மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.

சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?

ஆசிரியர் மீது நடவடிக்கை

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அனைத்து வகை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வருகை புரியும்போது அனைத்து ஆசிரியர்களும் கரோனா தடுப்பூசி போடுவது அவசியம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்தப் பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்" என அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா தடுப்பூசி மாணவர்களுக்கு கட்டாயம்

எனவே தடுப்பூசி போடாத ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும், எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தடுப்பூசி
தடுப்பூசி

மூன்றாம் அலை உச்சம் பெறும்

இந்நிலையில், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் கரோனா தொற்றின் மூன்றாம் அலை உச்சம் பெறலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க: சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?

Last Updated : Aug 29, 2021, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.