ETV Bharat / state

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்; ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! - PONGAL GIFT TOKEN

தமிழக ரேஷன் கடைகளில் ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் தொகுப்பை வாங்கி செல்லும் மக்கள் (கோப்புப்படம்)
பொங்கல் தொகுப்பை வாங்கி செல்லும் மக்கள் (கோப்புப்படம்) (credit - etv bharat tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2024, 3:31 PM IST

Updated : Dec 31, 2024, 6:06 PM IST

சென்னை: தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும், அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு பரிசு தொகையுடன் சேர்த்து பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை அரசு பரிசு தொகையை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்க தடை.. சென்னையில் 19,000 போலீசார் குவிப்பு!

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் முன்கூட்டியே டோக்கன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் வீடு வீடாக தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒவ்வொரு ரேஷன் கடை அட்டை தாரர்களுக்கும் முதல் நாளில் காலை மதியம் இணைத்து தலா 200 டோக்கனும், 2 ஆம் நாள் முதல் 400 டோக்கனும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசுத்தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 3 மற்றும் 10 ஆம் தேதி பொங்கல் தொகுப்பு டோக்கன் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுவதால், இரு நாட்களின் பணி நாட்களை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 31, 2024, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.