ETV Bharat / state

உட்கட்சி விவகாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட அனுமதி இல்லை - ஈபிஎஸ் கடிதம் - EDAPPADI PALANISWAMI

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட அனுமதி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்) (credit - etv bharat tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2024, 4:10 PM IST

சென்னை: திண்டுக்கல்லை சேர்ந்த ராம்குமார் என்பவர் அதிமுக கட்சி தொடர்பாக முக்கிய வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு வழங்கியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதில் 8 வாரத்திற்குள் விசாரித்து வழக்கு முடிக்க வேண்டும் எனவும், அதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீஸ் தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதால், இரட்டை இலை தொடர்பான திண்டுக்கல் சூரிய குமாரின் வழக்கை தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்; ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

வழக்கு தள்ளுபடியான நிலையில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு பதில் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், '' அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கடந்த 19 ஆம் தேதி பதில் கடிதத்தை நேரில் சென்று கொடுத்திருந்தார்.

தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி கடிதம்
தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி கடிதம் (credit - etv bharat tamil nadu)

அந்த பதில் கடிதத்தில், உட்கட்சி விவகாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என குறிப்பிட்டிருந்தார். மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் இருக்கும் ராம்குமார் கட்சியின் சின்னம் குறித்து எப்படி வழக்கு தொடர முடியும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு தீர்மானத்தை சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிட முடியும் என்றும் உக்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது'' என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் வழக்கு தொடர்ந்துள்ள ராம்குமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்பதால் இவ்வழக்கினை நிராகரிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.