தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் வழக்கமாக ஜுன் மாதம் 2 அல்லது 3ஆம் தேதிகளில் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு நாடு முழுவதும் கரோனா பாதிப்புகள் இருப்பதால் பள்ளிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஒத்திவைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு தேர்வுகள், மே மாதத்தில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜூன் மாதத்தில் நிறைவடையும். மேலும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளும் ஊரடங்கு காலத்திற்கு பிறகே தொடங்கும்.
இத்தகைய சூழ்நிலையில், இந்தாண்டு ஜூன் மாத கடைசி வாரத்திலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு உத்தரவை மீறி இயங்கும் பள்ளிகள்: எச்சரிக்கை விடுத்த முதன்மைக் கல்வி அலுவலர்