இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொப்பம்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக இன்று (டிச.08) அதிகாலை தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் பழனியப்பன் என்பவரின் மகன் செல்வகுமார் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு