ETV Bharat / state

பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்ப

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
author img

By

Published : Jan 29, 2022, 7:25 PM IST

கரோனா பெருந்தொற்று காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ஜனவரி 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆலோசனைக்கு பிறகு, தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை இன்று (ஜன. 29) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. கரோனா தொற்று குறித்து அச்சம் இருப்பதால் மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. இதனை அந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனை மையம்- தமிழ்நாடு அரசு அரசாணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.