சென்னை:தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ளது. இந்நிலையில் தேர்தல் நாளான சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் தேர்தல் பணியில் இருப்பதால் நாளை(பிப்ரவரி 18) முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்குத் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனால் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க:வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை