ETV Bharat / state

கட்டட பணியாளர்கள் கழிவறையை எட்டிப் பார்த்ததாக மாணவிகள் புகார்! - ஜய கோபால் கரோடியா அரசு மகளிர் உயர்நிலை பள்ளி

சென்னை நங்கநல்லூரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் கட்டட வேலை செய்யும் வட மாநில பணியாளர்கள் கழிவறையில் எட்டிப் பார்த்ததாக தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

Etv Bharatகட்டட வேலையாட்கள் கழிவறையில் எட்டி பார்த்ததாக  பள்ளி மாணவிகள் புகார்

author img

By

Published : Dec 4, 2022, 9:24 AM IST

சென்னை: நங்கநல்லூர் அருகே ஜய கோபால் கரோடியா அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வட மாநில தொழிலாளர்களை வைத்து புதியதாகக் கழிவறை ஒன்று கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் கழிவறை அருகே ஏற்கனவே உள்ள கழிவறையை மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் கழிவறையில் பணி புரியும் வடமாநில பணியாளர்கள் மாணவிகள் கழிவறையை எட்டிப் பார்த்ததாகப் பள்ளி மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வட மாநில தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை செய்து இந்த சம்பவம் குறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வடமாநில தொழிலாளரிடம் இருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:முதலமைச்சர் பயணித்த நெடுஞ்சாலையில் எஸ்ஐ பணம் வசுல்; போலி போலீஸ் கைது..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.