ETV Bharat / state

பாடத்திட்டம் குறைப்பு குறித்து அலுவலர்கள் ஆலாேசனை!

author img

By

Published : Dec 2, 2020, 3:39 PM IST

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பாண்டில் பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் இறுதி ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.

school education department  curriculum reduction
பாடத்திட்டம் குறைப்பு குறித்து அதிகாரிகள் ஆலாேசனை!

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பாண்டில் பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் இறுதி ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல்செய்யப்படவிருப்பதால் இறுதி ஆலோசனை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நடைபெற்றுவருகிறது.

பள்ளிக் கல்வி ஆணையர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா உள்ளிட்ட பல அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

நடப்பாண்டில் பள்ளிகள் திறப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடங்களின் அளவை 50 விழுக்காடு குறைப்பதற்கு முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதன்படி பாடவாரியாக பாடக்குறைப்பு செய்யப்பட்டிருக்கின்றன. பாடத்திட்ட குறைப்பு குறித்து இன்றைய கூட்டத்தில் இறுதிசெய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.