ETV Bharat / state

‘ஜூன் 1 ஆம் தேதி கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும்’ - அமைச்சர் அன்பில் மகேஷ் - school reopen in tamilnadu

தமிழ்நாட்டில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி திறக்கப்படும்

author img

By

Published : May 22, 2023, 10:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் அதில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது தள்ளிப் போகும் என தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாடு முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும். தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறக்க இதுதான் காரணமா?

ஜுன் 1 ஆம் தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு பக்கம் தகவல் தெரிவித்திருந்தாலும், இதுதான் காரணமா என தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்த போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இதன் காரணமாக அண்மையில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த தினத்தன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை என்றால் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று எவ்வாறு இனிப்பு பொங்கல் வழங்க முடியும். மேலும் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்படுகின்ற சூழ்நிலையில்,

பள்ளிகள் ஜூன் ஒன்றாம் தேதி திட்டமிட்டபடி திறக்க இதுதான் காரணம் என தலைமைச் செயலக வட்டாரம் தெரிவிக்கின்றது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசின் இந்த முடிவினால் குழந்தைகள், பெற்றோர் என அனைவரும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் நலன் குறித்து அரசு சிந்தித்து இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள்- ஆதாரங்களுடன் ஆளுநரிடம் ஈபிஎஸ் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.