கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் எத்தனை? - Gaja cyclone
கஜா புயலால் எத்தனை பள்ளிகள் பாதிக்கப்பட்டன என்ற விவரத்தை பள்ளிக்கல்வித்துறை கோரியுள்ளது.
சென்னை: 2018ஆம் ஆண்டு இறுதியில் கஜா புயலால் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனைப் பள்ளிகள் பாதிக்கப்பட்டன, கஜா புயல் காரணமாக பள்ளிகளுக்கு எத்தனை நாள்கள் விடுப்பு வழங்கப்பட்டன, கஜா புயல் பாதிப்பிலும் செயல்பட்ட பள்ளிகள் எத்தனை என்பன குறித்த விவரங்களை நாளை (ஜூலை.31) மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தானியங்கி நாப்கின் எரியூட்டு இயந்திரப் பயன்பாடு தொடர்பாகவும், விவரம் தேவைப்படுவதால் மேற்கண்ட விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 2 முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர உத்தரவு!