ETV Bharat / state

மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

author img

By

Published : Aug 17, 2021, 8:18 AM IST

Updated : Aug 17, 2021, 9:42 AM IST

மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

08:11 August 17

சென்னை : மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மாற்று சான்றிதழை தர மறுக்கும் பள்ளிகள் மீது மாவட்ட கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பேரிடர் காரணமாக தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால் பல மாணவர்கள் வேறு பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் சேர்ந்துவருகின்றனர். வேறு பள்ளிகளில் சேர விரும்புவோர், மாற்றுச் சான்றிதழ் கோரும்போது, கட்டண பிரச்சினை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, வழங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தன.

மாணவர்களின் பாதிக்கப்படக் கூடாது

இதையடுத்து, மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை எதிர்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, தனியார் சுயநிதி பள்ளிகள் முழுவதும் மாணவர்களின் கட்டணத்தை நம்பியே செயல்படுகின்றன எனவும், எந்தெந்த மாணவர்கள் பள்ளியில் படிப்பை தொடர்கின்றனர், யார் வேறு பள்ளிக்கு செல்கின்றனர் என்ற விவரங்கள் தெரியாவிட்டால் பள்ளிகளின் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என்றும் மனுதாரர் சங்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காகவே பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முழு சுதந்திரம் உள்ளது

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இக்கட்டான சூழ்நிலையில் அரசின் ஒவ்வொரு முடிவிலும் தலையிட முடியாது என்ற போதிலும், இருதரப்பின் பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து வேறு பள்ளிக்கு மாறுவதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளதாகக் கூறிய நீதிபதி, "வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற பள்ளி, ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

கட்டண பிரச்னை உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சட்டப்படி தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு, சான்றிதழ் மறுக்கக் கூடாது என ஆணையிட்டார்.

நீதிபதி எச்சரிக்கை

மேலும், சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக இரு வாரங்களில் உரிய சுற்றறிக்கையைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராகப் புகார் தெரிவிக்கப்பட்டால், இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனவும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு நீதிபதி எச்சரிக்கைவிடுத்தார்.

இந்நிலையில், இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள கடிதத்தில், "மாற்று சான்றிதழ் விவகாரம் குறித்து தனியார் பள்ளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறிச் சென்று படிப்பதற்கு முழு சுதந்திரம் உள்ளது. மாணவர் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறுவதற்கு மாற்று சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். மாற்று சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் மாற்றுச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

மாணவர்கள் கட்டண பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தர மறுக்க கூடாது. கட்டண பாக்கி உள்ளிட்ட பிற பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட பணிகள் தனிப்பட்ட முறையில் சட்டப்படி தீர்வு காண வேண்டும். சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் பெண்கள் குறித்து மலாலா கவலை!

Last Updated : Aug 17, 2021, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.