கரோனா தீநுண்மி தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டன. வரும் கல்வியாண்டில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முடிவுசெய்ய பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் கல்வித் துறை அலுவலர்கள் மட்டும் இடம்பெற்றிருந்ததால் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைவைக்கப்பட்டன.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "மெட்ரிக், நர்சரி பிரைமரி, அரசு உயர்நிலை, மேல்நிலை, தொடக்க, மழலையர், சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பள்ளிகள் உள்ளிட்ட வாரிய பள்ளிகளில் ஒரு பெற்றோர் வீதம் பள்ளியின் பெயர், பெற்றோரின் விவரங்களை அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் பெற்றோர்களின் மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கருத்து கேட்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.