சென்னை: உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு நவம்பர் 22இல் பொறுப்பேற்றார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணியிடம் காலியாக இருந்ததால் பொறுப்புத் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொண்டுவந்தார்.
இவரது பதவிக்காலம் 2022 செப்டம்பர் 12ஆம் தேதிவரை இருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்