ETV Bharat / state

உயர் நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத் நியமனம் - Satyanarayana Prasad appointed new Additional Judge of the High Court

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்துக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

சத்தியநாராயண பிரசாத் நியமனம்
சத்தியநாராயண பிரசாத் நியமனம்
author img

By

Published : Oct 29, 2021, 4:03 PM IST

சென்னை: உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சபிக் ஆகிய 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி நான்கு பேரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்தை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய நீதிபதி சத்தியநாராயண பிரசாத், இன்று (அக்.29) பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதையும் படிங்க: 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - துரைமுருகன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.