சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் உடல் நலக்குறைவு எனக் கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
விசாரணை என்ற பெயரில் தந்தை, மகனை அழைத்துச் சென்று காவல் துறையினர் அடித்து கொன்றுவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு நாடு முழுவதும் தற்போதுவரை எதிர்க்கட்சியினர், திரை பிரபலங்கள் எனப் பலரும் குரல் எழுப்பிவருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க...விசாகப்பட்டினம், சைனர் பார்மா விஷவாயு கசிவில் இருவர் உயிர் இழப்பு!