ETV Bharat / state

'எம்ஜிஆருக்கே யோசனை சொல்லிருக்கேன்' - சசிகலாவின் ரீ- என்ட்ரி விரைவில் - SASIKALA POLITICS

கட்சி விஷயமாக எம்ஜிஆர் தன்னிடம் நிறைய கருத்துகளை கேட்டிருக்கிறார் என்று தொண்டர் ஒருவரிடம் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார். ஜூலை 5ஆம் தேதி தொண்டர்களை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்.

author img

By

Published : Jul 1, 2021, 11:09 PM IST

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சசிகலா தான் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் நிகழ்வுகளை வீட்டிலிருந்து உன்னிப்பாக கவனித்துவந்தார்.

அரசியலில் ரீ- என்ட்ரி

தேர்தல் முடியும் வரை அமைதி காத்த சசிகலா, தற்போது தொண்டர்களிடம் பேசிவருவதால் அரசியலில் ரீ- என்ட்ரி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக தொண்டர்களுடன் சசிகலா பேசிவரும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிவருகின்றன.

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இதையடுத்து அதிமுக தலைமை உத்தரவின்பேரில் சசிகலாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றனர். மேலும் சசிகலாவுடன் செல்போனில் பேசிய பலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதா - சசிகலா

'ஜூலை 5இல் தொண்டர்களை சந்திக்கிறேன்'

இந்நிலையில் தற்போது சசிகலா தரப்பில் புதிய ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தொண்டர் ஒருவரிடம் உரையாடிய சசிகலா, ஜெயலலிதாவுடன் மட்டுமல்ல, எம்ஜிஆரோடும் சேர்ந்து நான் பயணித்திருக்கிறேன். இது நிறைய பேருக்கு தெரியாது. அவருடன் பேசி பழகியதால் நிதானமாக பேசக் கற்று கொண்டேன்.

கட்சி விஷயமா நிறைய கருத்துகளை என்னிடம் அவர் கேட்டிருக்கிறார். நேற்று கூட எம்ஜிஆர் வீட்டில் இருந்து வந்து என்னை பார்த்து விட்டு சென்றனர். தொண்டர்களை இவர்கள் காப்பாற்ற போவது இல்லை. ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு தொண்டர்களை சந்திப்பேன் " என்று பேசியுள்ளார்.

மற்றொரு ஆடியோவில், "கட்சி நம் உடையது, தொண்டர்களால் ஆனது தான் இயக்கம். விரைவில் அனைத்து ஊருக்கும் சுற்றுபயணம் வருவேன், அனைவரையும் சந்திப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சசிகலா உட்பட 501 பேர் மீது வழக்குப்பதிவு - முன்னாள் அமைச்சர் கொடுத்தப் புகாரில் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.