ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாள்கள் முக்கியமானவை. துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை-ஆயுத பூஜை புரட்டாசி 28ஆம் நாளான இன்று (அக்டோபர் 14) கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை கொண்டாட காரணம் என்ன?
ஆயுத பூஜை என்றும் சொல்லப்படும் இந்த பூஜையைப் பொதுவாக இரவு நேரத்தில் செய்வதே சிறந்தது. நவராத்திரியின் எட்டு நாள்களும் விரதமிருந்து பூஜித்து வழிபட்டால் இறுதி நாளாகிய சரஸ்வதி பூஜை அன்று பூர்த்தியடையும்.
மகிஷாசுரன் என்ற அசுரனிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக முப்பெரும் தேவியர்களும் ஒன்பது நாள்கள் தவமிருந்து இறுதியில் மூவரும் இணைந்து ஓர் உருவாய் உருவெடுத்து மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்தனர்.
இந்தப் போருக்குப் பயன்படுத்திய ஆயுதங்களைப் போற்றும் வகையில் ஆயுத பூஜை என்ற பெயரில் ஒன்பது நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாள் கொண்டாடத்தைத்தான் சமஸ்கிருதத்தில் நவ-ராத்திரி என்று அழைக்கின்றோம். இந்தப் போரில் வெற்றிபெற்ற நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க : ஆயுத பூஜை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு