ETV Bharat / state

கிராம ஊராட்சிப் பணிகளுக்கு ரூ.7500 மதிப்பூதியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்

கிராம ஊராட்சிப் பணிகளுக்கு ரூ.7500 மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிராம ஊராட்சி பணிகளுக்கு ரூ.7500 மதிப்பூதியம் - மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Apr 8, 2022, 6:21 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்றைய மானியக்கோரிக்கை விவாதத்தில், மக்கள் நலப் பணியாளர்கள் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், 'மக்கள் நலப்பணியாளர்கள் சார்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக மேல்முறையீட்டு வழக்குகளில் 19-8-2014அன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி நியமனம்: மேற்படி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 19-8-2014 நாளிட்ட உத்தரவில் சென்னை உயர் நீதிமன்றம் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டு அளித்த தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை (Interim stay) விதித்தது. 11-8-2017 அன்று மேற்படி சிறப்பு விடுப்பு மனுக்கள் Civil Appeal-ஆக மாறுதல் செய்யப்பட்டு, கடைசியாக 28-2-2022 அன்று விசாரணைக்கு வரப்பெற்று தற்போது நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், மக்கள் நலப்பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினைக் கருத்தில்கொண்டு, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அவர்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணக்கூடிய வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அவர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

பின்னர், நிலுவையில் உள்ள வழக்கில், தீர்ப்பிற்கு உட்பட்டு நீதிமன்ற ஆணைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில், பின்வரும் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தீர்ப்பிற்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ளன.

ரூ.7500 மதிப்பூதியம்: மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்” என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும். இப்பணிக்கென ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பூதியத்தினை ரூ.3,000/-லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தியும், மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்கெனவே கிராம ஊராட்சிப் பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கிராம ஊராட்சிப் பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.2,500/- வழங்கவும், இதன்படி இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக ரூ.7,500/- வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகள் காலத்தில், காலமான மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு, அவர்கள் விரும்பினால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழ் மாணவர்கள் எந்த நாட்டிலும் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.