சென்னை: 'பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை' மற்றும் 'தமிழை தேடி இயக்கம்' வழங்கும் 'தனித்தமிழ் சொற்கள் அறிவோம்' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் எ.கே.மூர்த்தி தலைமையில் தமிழ்மொழியில் பெயர் பலகைகளை கொண்ட கடைகளின் திறப்பு விழாவில் இன்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்று தமிழர்களின் வீர விளையாட்டுகளான வாள் வீச்சு, சிலம்பம் உள்ளிட்டவைகளை செய்து அசத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமகவின் நிறுவன தலைவர் ராமதாஸ், "தமிழை அழியாமல் பாதுகாக்க வேண்டும்; தமிழ்மொழி மூத்த மொழி என்றார். தமிழை காப்பாற்றும் ஒரு முயற்சியாக பெயர் பலகைகள், தமிழில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆந்திரா, கர்நாடகா என எங்கு சென்றாலும் அங்கு அவர்கள் மொழிகள்தான் மேலே எழுதப்பட்டு இருப்பதாகவும் ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலம் தான் பேசப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆகவே, திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திரைப்படத்திற்கு செல்பவர்கள் தமிழில் பேசாமல், 'மச்சி ஈவ்னிங் ஷோவுக்கு போவோமா' எனக் கேட்பதாக கூறிய அவர், என்ன செய்வது? தமிழை மறந்தால் நாம் வாழ முடியுமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். ஆகவே, நாம் நன்றாக வாழ, தமிழை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகளிடம் நாம் என்ன சொல்கிறோமே? அதை அப்படியே செய்வார்கள் என்றும் எனவே, நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு தமிழை சொல்லிக் கொடுங்கள் என்றும் அப்போதுதான், தமிழை காப்பாற்ற நம்மால் முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தமிழை காப்பாற்றி தீர வேண்டும் என்றும் எனவே, அனைவரும் தமிழை காப்பாற்றுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்.
வணிக பெருமக்கள், ஊடகங்கள் மனது வைத்தால் நிச்சயம் தமிழ்மொழியை காப்பாற்ற முடியும் என்றும், தமிழ்மொழியைப் போல், மூத்த மொழி உலகிலேயே இல்லை என இந்திய பிரதமர் மோடி என அனைவரும் துறந்து சொல்லி வருவதாகவும் ஆகவே, தமிழைக் காப்பாற்ற ஒரு முயற்சியமாக இன்று தமிழ் பெயர் பலகையில் திறந்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாம் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல; தமிழக அரசின் அரசாணையை மதிப்பதில்லை, அதனை மதிக்கின்ற வகையிலேயே இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்த அவர், நாம் இப்போது வாழ்வது ஊமையராய், செவிடராய், குருடராய் வாழ்ந்து வருகின்றோம்" என சாடியுள்ளார்.
இதற்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், 'தமிழை தேடி' என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கப் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு இருந்தார். தமிழகத்தில் 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று பள்ளிகள், பெயர் பலகைகள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அழிவின் விளிம்பில் இருந்து அன்னை தமிழை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அனைத்து இடங்களிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, 'சென்னை முதல் மதுரை வரை தமிழைத் தேடி' பயணத்தை ராமதாஸ் மேற்கொண்டிருந்தார். இதில், தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுமார் 8 நாட்கள் நடைபெற்ற பயணத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்று தமிழின் பெருமை குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Wrestlers Protest : பிரிஜ் பூஷன் சிங்கிற்கு 3 ஆண்டுகள் சிறை? டெல்லி போலீசார் பதில்!