சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் 'மியாவாக்கி' முறையில் நகர்ப்புற அடர் காடுகள் அமைக்கும் பணியினை மாநகராட்சி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வளசரவாக்கம் ராயலா நகரில் அமைக்கப்பட்டுள்ள 'மியாவாக்கி' அடர்காடு அமைக்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்ட இடத்தை அமைச்சர் பென்ஜமின் பார்வையிட்டார்.
10 ஆயிரம் சதுரடி கொண்ட இந்த நிலத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் 8.72 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரங்கள், ஒரு மீட்டர் இடைவெளி வீதம் 762 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. குறிப்பாக, துளசி, வேம்பு, கொடுக்காபுளி, முல்லை, பவளமல்லி, பாரிஜாதம், பின்னை, மந்தாரை, தூதுவளை உள்ளிட்ட மூலிகைக் கன்றுகள் நடப்பட்டன.
![Rural Industries Minister Benjamin examines urban forestry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-minister-visited-miyavakki-form-script-7204894_08022020162554_0802f_1581159354_787.jpg)
இந்த ஆய்வின் போது ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டுப் பார்வையிட்டனர்.
![Rural Industries Minister Benjamin examines urban forestry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6010364_che.jpg)
இதையும் படிங்க : வதந்திகளைப் பரப்புவோருக்கு டிஎன்பிஎஸ்சி கண்டனம்