சென்னை தியாகராய நகரில் ரூபி நகைக்கடை செயல்பட்டுவந்தது. இந்த நகைக் கடையில் இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா நகைக்கடன் சேவை வழங்கப்பட்டு வந்தது.
இதனை நம்பிய ஏராளமான இஸ்லாமியர்கள், தங்கள் நகைகளை அடகு வைத்து கடன்தொகையைப் பெற்றுள்ளனர்.
நகைகளை பெற்ற வாடிக்கையாளர்கள் முறையாக பணத்தை செலுத்தியப் பின்னரும் நகையைத் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் கடையின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாகக் கூறி வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டனர்.
மேலும் கடை உரிமையாளர் மீது சுமார் 1,500 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தற்போது இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.