ETV Bharat / state

போலீசாரை மிரட்டி ஆடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர் கைது! - போலீஸ் பாத்ரூமில் வழுக்கி விழந்தவர்

சென்னை: மதுவிலக்கு சிறப்பு உதவி ஆய்வாளரை பற்றி அவதூறாக பேசியும் மிரட்டியும் ஆடியோ வெளியிட்ட சமூக ஆர்வலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை செய்திகள்  அம்பத்தூர் மதுவிலக்குப் பிரிவு  chennai news  RTI social activist arrest  காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்தவர்கள்  ambattur  போலீஸ் பாத்ரூமில் வழுக்கி விழந்தவர்  Liquor prohibited Division
போலீசாரை மிரட்டி ஆடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர் கைது
author img

By

Published : May 28, 2020, 6:57 PM IST

தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தேவேந்திரன், தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (மே 24) அம்பத்தூர் வானகரம் மெயின் ரோட்டிலுள்ள டன்லப் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அம்பத்தூர் மதுவிலக்குப் பிரிவு உதவி ஆய்வாளர் நாதமுனி, திடீரென அவர்களை சோதனை செய்துள்ளார். எதற்காக சோதனை செய்கிறீர்கள் என அந்த ஐந்து பேரும் கேட்டதற்கு சட்டவிரோதமாக இங்கு மதுவிற்கப்படுவதாக தகவல் வந்ததன் பேரில் சோதனை நடத்துவதாக அந்த உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அந்தசோதனையின்போது அவர்களிடமிருந்து எந்த மதுபாட்டில்களும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது. இந்த சோதனைக்காக தங்களிடம் உதவி ஆய்வாளர் நாதமுனி மன்னிப்பு கேட்கவேண்டும் என பேசி கடந்த 26ஆம் தேதி தேவேந்திரன் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த ஆடியோவில், "அம்பத்தூர் காவல் துறையைச் சேரந்த சிலர், கொலையை தற்கொலையாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். குற்றப்பிரிவில் உள்ள காவலர்கள் திருடர்களிடமிருந்து பணம் பறிக்கின்றனர். மதுவிலக்குப் பிரிவில் பணிபுரியும் காவலர்களில் சிலர், மதுக்கடையில் மதுபானங்களை கொள்ளையடிக்கும் நபர்களிடமிருந்து மதுபானங்களை பங்கு பிரிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

மேலும்,"தங்களிடம் வந்து சோதனை நடத்திய உதவி ஆய்வாளர் மற்றும் அவரை சோதனையிட உத்தரவு பிறப்பித்த ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சரிடம் மனு அளிக்கவுள்ளேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிக நபர்களால் பகிரப்பட்டது. இந்நிலையில், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்த மற்றும் தன்னைப் பற்றி அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட தேவேந்திரன் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் மதுவிலக்குப் பிரிவு உதவி ஆய்வாளர் நாதமுனி புகார் அளித்தார்.

இந்தப்புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் தேவேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மாஞ்சா நூல் விவகாரத்தில் தேவைப்பட்டால் குண்டர் சட்டம்...!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.