ETV Bharat / state

30 நிமிடங்களில் RT-PCR சோதனை முடிவு! பயணிகளின் சிரமத்தைக் குறைத்த தமிழ்நாடு அரசு - RT-PCR test results

சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு, ஆர்டிபிசிஆர் சோதனை முடிவு 30 நிமிடங்களில் கிடைக்கும் வகையில் அதநவீன கருவிகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

RT-PCR சோதனை முடிவு
RT-PCR சோதனை முடிவு
author img

By

Published : Aug 5, 2021, 10:50 PM IST

சென்னை: விமான நிலையத்தில், பயணியருக்கு மேற்கொள்ளும் கரோனா பரிசோதனை தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த வாரம் ஆய்வு செய்தார்.

லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு மட்டும், உடல் வெப்ப பரிசோதனையுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அமைச்சர் அறிவிப்பு

இதற்கு ரூ.900 கட்டணமாக வசூலித்து, 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனை முடிவுகளை, 13 நிமிடங்களில் அறிவிக்கும் வகையில் நவீன சோதனைக் கருவிகள் சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

அதி நவீனக் கருவி

ஒருவரின் உடல் வெப்ப நிலையைக் கண்காணிக்கும் போது, திரையில் வெப்ப நிலை பச்சை நிறத்தில் இருந்தால், அவருக்குப் பரிசோதனை தேவை இல்லை எனவும், சிவப்பு நிறத்தில் இருந்தால் அவருக்கு தொற்று பாதிப்பு உள்ளதாகவும் கணக்கிடப்படும் எனவும் கூறினார்.

30 நிமிடங்களில் முடிவு

அதன்படி, ரேபிட் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கருவிகள் சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வரும் பயணியருக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளில் மேற்கொள்ளும் ஆர்டி-பிசிஆர் சோதனையின் முடிவுகள், 30 நிமிடங்களில் வழங்கப்படுகிறது.

இந்தப் புதிய கருவிகள் இன்று (ஆக.5) முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன என்று சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு? - நாளை துறைசார் அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கும் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.