ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை சேத்துபட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு சென்ற அவர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
நாளை மூலக்கடையில் நடக்கவுள்ள சமுதாய பொங்கல் உட்பட பல நிகழ்ச்சிகளில் மோகன் பகவத் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பல முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும், இளம் தொழில் வல்லுனர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நாளை மறுதினம் விமானம் மூலம் மோகன் பகவத் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.