சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு அனுமதி வழங்க தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாட்டில் நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளிக்க தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டது. மேலும் அதற்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் அந்த அமைப்பின் தென் மண்டல தலைவர் வன்னியராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீதிமன்ற தீர்ப்பின் படி அணிவகுப்பை உள்ளரங்கிலோ அல்லது 4 சுவர்களுக்குள்ளோ நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
காஷ்மீர், மேற்கு வங்கம் என அனைத்து இடங்களிலும், அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்று வரும் நிலையில், இது எங்களுக்கு ஏற்புடையது அல்ல என கூறியுள்ளார். சட்டரீதியாக இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், இதனால் நாளை நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதலில் கலப்படம் இல்லாத பால் கொடுங்க: தமிழக அரசை விளாசிய கிருஷ்ணசாமி!