இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேரடி நெல் விதைப்பு சாகுபடி மூலம் சுமார் 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் பத்து நாட்களுக்கு முன்னரே அறுவடைக்கு தயாராகிறது. இதன் அடிப்படையில், நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு 600 ரூபாய் வீதம் மானியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை முன்னெடுத்து செல்லும் வகையில் சிஆர் 1009, சிஆர் 1009 சப் 1, கோ50, ஏடிடி 50, டிகேஎம் 13 போன்ற நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேளாண் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, விவசாயிகள் உரிய உழவு மானியத்தை பெற்று நீரை சேமித்து, அதிக விளைச்சல் பெறவேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.