சென்னை: பொழுதுபோக்கு இடங்களான மெரினா கடற்கரைக்கும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கும் வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகின்றன. இதனால், கடற்கரை பகுதிகளில் இயங்கும் கடைகளின் எண்ணிக்கையும் தினம் தினம் அதிகரித்து தற்போது இரண்டு கடற்கரையிலும், 1800 முதல் 2000 கடைகள் வரை செயல்படுகின்றன.
இதில், மீனவர்கள் தான் அதிகமான கடைகளை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு கடைகளில் சிலர் சுகாதாரமின்றி இயங்கியும், மேலும் உலகப் புகழ் வாய்ந்த கடற்கரையான மெரீனா, எலியட்ஸ் கடற்கரையில், மனல் பரப்பில் இருக்கும் கடைகள் இருப்பதால் பொலிவின்றி இருந்து வருகிறது. இதனைச் சரி செய்யவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் கடைகளை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 900 வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கடைகளை இலவசமாக அமைத்து தர மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் இந்த 900 கடைகளில், 540 மட்டும் மெரினாவில் ஏற்கெனவே கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு என்றும், மீதுமுள்ள 360 கடைகளை பிற பகுதிகளைச் சேர்ந்த புதிய வியாபாரிகளுக்கு என்றும் ஒதுக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் பெறப்பட்டன. அதிலிருந்து குலுக்கல் முறையில் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டது.
இந்த ஸ்மார்ட் கடைகள் எல்லாம் உலோக்கதாலும் மற்றும் முன்பக்கம் கதவுகளை கொண்டதாகும். இந்த 900 ஸ்மார்ட் கடைகளும், தலா ரூ.1.50 லட்சம் என்ற விலையில் வாங்கியிருந்த நிலையில், மீனவர் அல்லாதவர்கள் கடை வைக்க, அங்கு கடை வைத்திருக்கிருபவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி ஒதுக்கீடுக்கான ஆணை பெற்ற அப்பகுதி மீனவர்கள், நீண்ட காலமாக ஸ்மார்ட் கடைகளை வாங்காமல் இருந்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் ஸ்மார்ட் கடைகள் பழுதாகி, பயனற்று ஆங்காங்கே மைதானங்களிலும், மயான்ஙளிலும், குப்பை குவியல் போல் கிடக்கின்றன.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டப்போது, “கடற்கரையில் இருக்கும் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுடன் ஸ்மார்ட் கடைகள் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிற்து. கடற்கரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு கலந்தாலோசித்து, சுமூகமாக திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கடற்கரையில் ஸ்மார்ட் கடைகளை அமைப்பதற்கான இடங்களை, வியாபாரிகளுடன் சேர்ந்து தேர்வு செய்ய இருக்கிறோம்.
மேலும், மாமன்ற கூட்டத்தில் இதைப்பற்றி மாநகராட்சி சார்பில் பேசியுள்ளோம். மேலும் பல இடங்களில் இதை அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெசண்ட் நகர், மெரீனா ஆகிய பகுதிகளில் வழங்கப்படாத இருக்கும் ஸ்மார்ட் கடைகளும் சிறு சிறு பழுது பார்க்கும் பணியானது இருக்கிறது அதையும் விரைவில் செய்து விடுமோம்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஏரியில் மண் எடுப்பதை தடுத்த நபருக்கு கொலை மிரட்டல்.. பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு!