சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் வினோத். இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு எண்ணிற்கு இன்று (ஜூலை 21) காலை ஒரு அழைப்பு வந்தது.
பணத்தை மாற்ற வங்கிக்கு வந்த வினோத்
அதை எடுத்து பேசியபோது, எதிர் முனையில் பேசியவர் தன்னை இந்தியன் வங்கி மேலாளர் என அறிமுகம் செய்து கொண்டு புதிய ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாகவும், உடனடியாக வங்கி வந்து பழைய நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய வினோத், உடனடியாக தனது கடையிலிருந்த 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலுள்ள இந்தியன் வங்கிக்குச் சென்றுள்ளார்.
ரூ.50 ஆயிரததுடன் ஓட்டம்
வங்கியின் உள்ளே வினோத் நுழைந்தவுடன் அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து தாங்கள் தானா? எனக்கூறி அவரிடமிருந்த 50 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சிறிது நேரம் காத்திருந்துவிட்டு விசாரித்தபோது தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். உடனடியாக இது குறித்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மோசடியில் ஈடுபட்டவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடு கட்டித் தருவதாக கூறி ரூ. 65 லட்சம் மோசடி- தலைமறைவாக இருந்த பெண் கைது