சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூரில் எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் தந்தை இந்திரன் அவர்களின் திரு உருவ பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பால்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி. எம் பி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் அவளின் தந்தை திரு உருவ படத்தை திறந்து வைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "பல்லாக்கு அனுமதி விஷயத்தில் எது நியாயமோ, எது நாட்டு ஏற்றதோ, எது சமுதாயம் ஏற்குமோ அதைத்தான் முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ளார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திருச்சி சிவா மகன் பாஜக சென்றது பற்றி கேள்விக்கு எம்ஜிஆர் கட்சியை விட்டு போன போதே கவலைப்படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம், திமுக தேம்ஸ் நதி மாதிரி யார் வந்தாலும், யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை. தேம்ஸ் நதி போன்று 70 வருடம் திமுக போய் கொண்டிருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் திமுக போகும் என தெரிவித்தார்.