ETV Bharat / state

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை - ஆர்.எஸ். பாரதி

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 1, 2022, 4:00 PM IST

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை - ஆர்.எஸ் பாரதி

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பாக இன்று(ஆக.1) தேர்தல் ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கலந்துகொண்டனர். அதன் பின்னர் திமுக சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி கூறியதாவது, “வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பாக இன்று(ஆக.1) தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றியுள்ள நிலையில் தற்போது இந்தக் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் வாக்குச்சாவடி மையத்தில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகின்றன.

திமுகவைப் பொறுத்தவரை வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதில் உடன்பாடு இல்லை. முதலில் வாக்காளர் பட்டியலை சீர் செய்து முழு சரியான வாக்காளர் பட்டியலை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும்.

வாக்காளர் அட்டையுடன் வாக்களிக்கும்போது கூடுதலாக 12 ஆவணங்களுள் ஒன்றை வாக்காளர் அட்டையுடன் வாக்களிக்கும்போது கொண்டு வரலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த 12 ஆவணங்களுடன் கூடுதலாக ஆதார் எண்ணையும் ஒரு ஆவணங்களாக சேர்த்துக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும், அதே நேரத்தில் ஆதார் அட்டை தொடர்பாகவும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் ஒரே நபர் நான்கு ஆதார் அட்டை வைத்திருப்பதாகவும்; எனவே முதலில் அது குறித்த குளறுபடிகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நாட்டில் 5 கோடி போலி ஆதார் அட்டைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சர்வதேச செஸ் வீரர்களை ஈர்க்கும் செல்ஃபி ஸ்பாட் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.