ETV Bharat / state

'ஓஎம்ஆரில் புதிய நடைமேம்பாலம்' - பியூஷ் கோயலுக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்! - திருவான்மியூர்

சென்னை: திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஓஎம்ஆரில் ஒரு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

ஓ.எம்.ஆர் சாலை
author img

By

Published : Jul 9, 2019, 7:47 AM IST

Updated : Jul 9, 2019, 9:43 AM IST

அந்தக் கடிதத்தில், "பழைய மகாபலிபுரம் சாலையில் வேலை செய்யும் பெரும்பாலான ஐ.டி ஊழியர்கள் மின்சார ரயில் மூலம் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இறங்கி தங்களது அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.

இவர்களில் டைடில் பார்க்கில் உள்ள அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் திருவான்மியூர் ரயில் நிலையத்தை விட்டு கீழே இறங்காமல் ஓஎம்ஆருக்கிடையே போடப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை பயன்படுத்தி அலுவலகத்தைச் சென்றடைகின்றனர். ஆனால் ஓஎம்ஆரின் தெற்கு பகுதியில் வேலை செய்பவர்கள் திருவான்மியூர் ரயில் நிலையத்தை விட்டு கீழே இறங்கி வந்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையைக் கடந்து தங்களுடைய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரத்தில் இந்த சாலையைக் கடப்பது கடினமாக இருப்பதால் நேரம் விரயமாவது மட்டுமல்லாமல் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றது. எனவே, இதனைத் தடுக்க திருவான்மியூர் ரயில் நிலையத்தின் வெளியேறும் வாயிலிலிருந்து நேராக ஓஎம்ஆரைக் கடக்கும் விதமாக ஒரு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.

இதன் மூலம் மக்கள் ரயில் நிலையத்தை விட்டு கீழே இறங்காமல் சாலையைக் கடந்து தெற்கு ஓஎம்ஆரில் உள்ள அவர்களது அலுவலகங்களுக்குச் செல்ல முடியும். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த நடைமேம்பாலத்தை விரைந்து அமைக்க ரயில்வே அலுவலர்களுக்கு ரயில்வே துறை அமைச்சர் ஆணையிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:அதில், "பழைய மகாபலிபுரம் சாலையில் வேலை செய்யும் பெரும்பாலான ஐ.டி. ஊழியர்கள் மின்சார ரயிலை பயன்படுத்தி திருவான்மையூர் ரயில் நிலையத்தில் இறங்கி தங்களது அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.

இவர்களில் டைடில் பார்க்கில் உள்ள அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர் திருவான்மையூர் ரயில் நிலையத்தை விட்டு கீழே இறங்காமல் ஓ.எம்.ஆர் சாலைக்கிடையே மேலே போடப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை பயன்படுத்தி அலுவலகத்தை சென்றடைகின்றனர். ஆனால் ஓ.எம்.ஆர் சாலையின் தெற்கு பகுதியில் வேலை செய்பவர்கள் திருவான்மியூர் ரயில் நிலையத்தை விட்டு கீழே இறங்கி வந்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையை கடந்து தங்களுடைய அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.

மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரத்தில் இந்த சாலையை கடப்பது கடினமாக இருப்பதால் நேரம் விரயமாவது மட்டுமல்லாமல் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றது. எனவே இதனை தடுக்க திருவான்மியூர் ரயில் நிலையத்தின் வெளியேறும் வாயிலிலிருந்து நேராக ஓ.எம்.ஆர் சாலைக்கு பக்கத்தில் ஒரு நடைமேம்பாலம் பாலம் அமைக்க வேண்டும். இந்த நடைமேம்பாலம் மூலம் மக்கள் ரயில் நிலையத்தை விட்டு கீழே இறங்காமல் சாலையை கடந்து தெற்கு ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள அவர்களது அலுவலகங்களுக்கு செல்ல முடியும்.

எனவே பயணிகளின் நலனை கருதி இந்த நடைமேம்பாலத்தை அமைக்க ரயில்வே அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஆணையிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Conclusion:
Last Updated : Jul 9, 2019, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.