ETV Bharat / state

குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை - மாதம் தோறும் ரூ 7500 உதவித்தொகை

குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்கு தயாராக 10 மாதங்களுக்கு தலா ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.7,500 ஊக்கத்தொகை
ரூ.7,500 ஊக்கத்தொகை
author img

By

Published : Mar 20, 2023, 3:06 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்துக்கு ஏற்ப அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் கல்வியாண்டில் அரசு தொடங்கும். இக்கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.

அம்பத்தூரில் திறன் பயிற்சி மையம்: இத்திட்டத்தில் 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் ரூ.2,783 கோடி ரூபாய் மதிப்பில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும். பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்கும் வகையில், ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும். இந்த மையத்தில் இயந்திர மின்னணுவியல், இணைய வழிச் செயல்பாடு, அதி நவீன வாகன தொழில்நுட்பம், உயர்தர வெல்டிங், துல்லியப் பொறியியல் போன்ற தொழில்நுட்பங்களுக்கான பயிற்சி அளிக்கப்படும்.

நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ.10 கோடி: மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களில் பயிற்சி அளித்து நல்ல வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக 'நான் முதல்வன்' என்ற தொலைநோக்கு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் மொத்தம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 12,582 பொறியியல் ஆசிரியர்களுக்கும், 7,797 கலை மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சூளகிரியில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம்: திறன் பயிற்சி கட்டமைப்பை பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாக பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் என்ற இத்திட்டத்துக்கு, இந்த ஆண்டில் ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும்.

ரூ.7,500 ஊக்கத்தொகை: குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருள் வழங்கும் திட்டத்தை, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் செயல்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வான மாணவர்கள் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகுவதற்கு மாதம் ரூ.7,500 வீதம், 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: TN Budget 2023: சென்னையில் புதிய பன்னோக்கு மருத்துவமனை திறப்பு எப்போது? - மருத்துவத்துறையில் அதிரடி அறிவிப்புகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.