சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து சோதனை செய்துவருகின்றனர்.
அப்போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அலுவலர்கள் அபராதம் விதித்துவருகின்றனர். இந்நிலையில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாதவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் ஆகியோரிடமிருந்து நேற்றுவரை 3.90 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று (ஏப்ரல் 19) புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலைய வளாகத்தில் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ.56,000 அபராதத்தை மாநகராட்சி அலுவலர்கள் வசூலித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாகையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்!