ETV Bharat / state

தொழில் அமைத்து தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் - சுய தொழில் அமைத்து தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி

சென்னை: சுய தொழில் அமைத்து தருவதாக கூறி பல பேரிடம் 2 கோடி ரூபாய்வரை மோசடி செய்த நபரின் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

Fraud
Fraud
author img

By

Published : Jul 6, 2021, 7:57 PM IST

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுய தொழில் அமைத்து தருவதாக கூறி தங்களிடமிருந்து ரூ. 2 கோடி வரை மோசடி செய்த எஸ்.எஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சையது சுலைமான் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "கரோனா ஊரடங்கின்போது வீட்டிலிருந்தபடியே சுய தொழில் அமைத்து தருவதாக கூறி சமூக வலைதளங்கள், நாளிதழில் எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று வந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

இதைப் பார்த்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரான சையது சுலைமான் என்பவரை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது இந்தியா முழுவதும் மளிகை பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்துவருகிறோம். மளிகை பொருட்களை, தான் தருவதாகவும், அதனை 500 கிராம்,1 கிலோ எடைகளில் பேக்கிங் செய்து கொடுத்தால் அதற்கேற்ப மாதம் 25 ஆயிரம் ரூபாய்வரை வருவாய் ஈட்டலாம் என தெரிவித்தார். மளிகை பொருட்கள் வைக்க குடோன் வாடகைக்கு கொடுத்தால் 1 லட்சம் ரூபாய்வரை ஈட்டலாம் எனவும் அவர் கூறினார்.

ஆனால் அதற்கு டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய்வரை தர வேண்டும் என்று கூறினார். இதனை நம்பிய பலர் அந்த நிறுவனத்தில் 25 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய்வரை பணத்தை கட்டினோம். ஒரு மாதம் மட்டும் பணிக்கான சம்பளத் தொகையை சுலைமான் வழங்கினார். அதன் பின் மளிகை பொருட்களும் வீட்டிற்கு வரவில்லை. பணிக்கான சம்பள தொகையையும் சுலைமான் தரவில்லை.

g
எஸ்.எஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விளம்பரங்கள்

இதனையடுத்து சுலைமானை பலமுறை தொடர்பு கொண்டு பேசியபோது பணம் தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார். இதனையடுத்து சுலைமானின் வளசரவாக்கம், அண்ணா நகர் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு ஏராளமான நபர்கள் சுலைமானிடம் இதேபோல் ஏமாற்றமடைந்தது தெரியவந்தது.

சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் 2 கோடி ரூபாய்வரை சுலைமான் மோசடி செய்துள்ளார். இது குறித்து சுலைமான் மீது 50க்கும் மேற்பட்ட நபர்கள் புகார் அளித்துள்ளனர். சுலைமான் ஹைதராபாத்தில் இதேபோல் மோசடி செய்துவிட்டு தற்போது தமிழ்நாட்டில் இந்த மோசடியை நிகழ்த்தி வந்துள்ளார்.

g
சையது சுலைமான்

சுலைமான் தெலுங்கு தெரிந்த நபர்களை மட்டுமே குறிவைத்து இந்த மோசடியில் சிக்க வைக்கிறார். உடனடியாக அவரை காவல் துறையினர் கைது செய்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க: ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் பரிசு: ஆசைவார்த்தை காட்டி மோசடி செய்த ஆசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.