இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.16.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக ரூ.142.04 கோடி பறிமுதல் செய்யபட்டுள்ளது. அதேபோல் 328 கிராம் தங்கம், 6.72 கிலோ வெள்ளி என மொத்தம் 12.5 லட்சம் மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது", என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "4 தொகுதி இடைதேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு 13 நிறுவனங்களில் இருந்து துணை ராணுவ படையினர் வர உள்ளனர்", எனவும் கூறினார்.
மேலும், "4 தொகுதி இடைதேர்தலில் போட்டியிட 256 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 242 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்", என குறிப்பிட்டார்.
ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்குவது தொடர்பாக தலைமை செயலர், தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.